தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 28 ஆம் தேதி) முதல் 30 ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மூன்றுநாள்களுக்கு மழைபெய்யும். இதனால் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டிணம், காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 28 ஆம் தேதி லேசான முதல் மிதமான மழைபெய்யும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். தமிழகத்தின் தென்மாவட்டங்கள், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் பகுதிகளில் வரும் 29, 30ம் தேதிகளில் ஓரளவு மழைபெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.