ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இது தவிர பிராந்திய அடிப்படையில் பத்து நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக இருக்கலாம். தற்காலிக உறுப்பினர் பதவி இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கும். இதற்கான தேர்தல் ஆண்டு தோறும் நடைபெறும்.
இந்த நிலையில் 2021-2021 ஆண்டுகளுக்கான ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. ஆசியா-பசுபிக் பிராந்தியத்துக்கான இடத்துக்கு இந்தியா போட்டியிட்டது. பெரும்பாலான நாடுகள் வாக்களித்து இந்தியாவை தேர்ந்தெடுத்தன. இந்தியா எட்டாவது முறையாக ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐ.நா சபையில் இந்திய தேசியக்கொடி பொருத்தப்பட்டுள்ளது