இந்தியாவின் பாதுகாப்பிற்காக மூன்று முக்கிய படைகள் செயல்படுகிறது அதில் முக்கியமான ஒரு படைதான் விமானப்படை.முப்படைகளின் தளபதிகளும் இந்திய முப்படைகளையும் வழி நடத்திச் சென்று கொண்டிருக்கின்றனர். இதில் முக்கியமான விமானப்படையின் ஏரோ இந்திய விமானக் கண்காட்சி இந்த வருடம் இந்தியாவில் நடக்க இருக்கிறது.
ஏரோ இந்தியா 2021 என்ற விமான கண்காட்சியில் அமெரிக்காவின் பி-1 லான்சர் ரக விமானமும் இந்த ஆண்டு முதல்முறையாக இடம்பெறும் என அமெரிக்க துணை தூதரக அதிகாரி டான் ஹெஃப்ளின் தெரிவித்தார். இந்திய பாதுகாப்புத் துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரோ இந்தியா என்ற பெயரில் விமான கண்காட்சி நடைபெறுவது குறிப்பிடதக்கது.