ஒருமுறை திருநெல்வேலியில் ஒரு கூட்ட்டதில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அதற்காக ஒருவர் மட்டுமே நிற்கும் அளவிற்கு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடை ஏறிய எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாக கூடி நின்ற மக்கள் மத்தியில் பேசத்தொடங்கினார். எம்.ஜி.ஆர் பேசிக்கொண்டிருக்கும்போதே மழை தூறத்தொடங்கியது. அப்போது ஒருவர் ஓடிவந்து குடைபிடிக்க எத்தணித்தார். அதை தடுத்த எம்.ஜி.ஆர். என் ஒருத்தனுக்கு குடை பிடிக்கிறாய். என் முன்னால் ஆயிரக்கணக்கான மக்கள் நிக்கிறாங்க. அவங்க அவ்வளவு பேரும் இதனை வாங்க அவங்க அவ்வளவு இருக்கும் குடை பிடிக்கிற சூழல் இப்ப இல்லை. அதனால நானும் மழையில் போய் நின்னு பேசுறேன், அப்படின்னு சொல்லிட்டு எம்.ஜி.ஆர் இரண்டு நிமிடம் அந்த கூட்டத்தில் பேசினார். இப்படித்தான் எம்ஜிஆர் மக்களை கவர்வதற்காக விதவிதமான உத்திகளைப் பயன்படுத்தினர். அது இப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையாண்டு வருகிறார்.
திருச்சியில் நேற்று தொடங்கிய மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் நேற்றும் இன்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஸ்ரீ ரங்கத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வந்தார். அவர் மழையில் நனைந்தபடியே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரசார மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போது மழைபெய்தது. உடனே அவரது பாதுகாவலர் குடையை எடுத்துக்கொண்டு முதல்வர் அருகே சென்றார். ஆனால் குடை வேண்டாம் என்ற முதல்வர் வெள்ளை துண்டை கேட்டு வாங்கி போர்த்திக்கொண்டார். பொன்னர் தொடர்ந்து பேசினார். சுமார் பத்து நிமிடங்கள் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க-வை வெற்றிப்பெறச் செய்து, மீண்டும் அம்மாவின் கோட்டையாக மாற்ற வேண்டும்” என்றார். முதல்வர் பேச்சை கேட்க பொதுமக்களும் மழையில் நனைந்தபடி அங்கு திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.