தமிழ்நாட்டை ஆண்ட முக்கியமான தலைவர்களில் எம்.ஜி.ராமச்சந்திரன் எனப்படும் எம்ஜிஆரும், அவருக்கு அடுத்தபடியாக அவர் தோற்றுவித்த கட்சியை வழி நடத்திய ஜெ.ஜெயலலிதாவும் மறக்கமுடியாத தலைவர்கள் பட்டியலில் இருக்கின்றனர்.

தற்போது அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுதே இந்த இருபெரும் தலைவர்களுக்கு கோவில் கட்ட அக்கட்சி தீர்மானித்திருக்கிறது.திருமங் கலம் அருகே உள்ள குண்ணத்தூரில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கோவில் எழுப்பியுள்ளார். தை பொங்கல் தினத்தன்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு அபிஷேகம் செய்தார் அமைச்சர் உதயகுமார்.
வரும் ஜனவரி 30ஆம் தேதி அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளனர் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன