ஈசா யோகா மையத்தின் சத்குரு ஜக்கிவாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். அதில் நான் யாருக்கு ஓட்டுப்போடணும், குழப்பமாக இருக்கு என ஒருவர் கேட்கிறார். அதற்கு பதிலளித்து பேசும் ஜக்கி வாசுதேவ், “என்னுடைய ஓட்டு யாருக்குன்ன, முக்கியமா தமிழ்நாட்டுக்கு, தமிழ் மண்ணுக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழ் நீருக்கு. முக்கியமான ஒரு விஷயம் என்னன்ன காவேரி புத்துணர்வுக்காக சில வேலை செய்ய தேவை இருக்குது. இது விஞ்ஞான பூர்வமா யுனைடெட் நேஷன்ல பலவிதமான விசாரணை பண்ணியிருக்கிறோம். காவேரி தமிழ்நாட்டுல மட்டுமில்ல. மூணு மாநிலத்தில ஓடுது. கவர்மெண்ட் அடுத்ததா யாரு வந்தாலும், மூனு மாநிலமும் சேர்ந்து ஒரு சயண்டிபிக் கமிட்டி அமைக்கணும். இதுக்கு தேவையான விஞ்ஞானம் எல்லாமே இருக்குது. இதை மக்களுக்கு சொல்லணும். இதை ஆறு மாசத்தில எடுத்து பண்ணனும். காவேதி வெள்ளாமா இதுக்குது இல்லன்ன காய்ஞ்சுபோய் இருக்குது.
காவேரி நடந்துவந்தா வளம், ஓடி வந்தா வெள்ளம். இதுக்கு தேவையான பணியை யார் எடுப்பாரோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு. அடுத்ததா விவசாயிக்கு விளை பொருட்களுக்கு விலை கிடைக்கல. ஒவ்வொரு ரெண்டு ஏக்கருக்கும் தனி வேலி, தனி தண்ணி வசதி பண்ணியிருக்கிறாங்க. நாம அடுத்ததா இயற்கை விவசாயத்துக்கு போகணும், மர விவசாயத்துக்கு போகணும். விவசாயி எதை விளைவித்தாலும் அதை எங்க வேணும்னாலும் விற்பனை செய்ய அவருக்கு வாய்ப்பு வழங்கணும். தீப்பெட்டி உற்பத்தி பண்ணினா ஜப்பான்ல வரைக்கும் கொண்டு விக்க முடியும் ஆனா நெல்ல நீங்க கர்நாடகாவில கூட கொண்டுபோய் விற்க முடியாது. விவசாயத்துக்கு மட்டும்தான் இந்த கட்டுப்பாடு இருக்கிறது. விவசாயத்துக்கு சுதந்திரம் கொடுக்கிறவங்களுக்கு என் ஓட்டு. ஆங்கிலேயன் நம்மை அடிமைப்படுத்த கொண்டுவந்த பழைய மெக்காலே கல்வித்திட்டமே இப்போதும் இருக்கு. தொழில் பயிற்சியை வெளியத்தான் படிக்கணும்னு இல்ல, பள்ளியிலும் சொல்லிக்கொடுக்கலாம். எலக்ஷன் முடிஞ்ச மூனு மாசத்துல எல்லா மாவட்டத்திலயும் இளைஞர்களுக்கு ஹைகிளாஸ் திறன்மேம்பாடு மையத்துக்கு அடிக்கல்லிடுவதா சொல்லுறவங்களுக்குத்தான் என் ஓட்டு. பள்ளிக்க்கூடத்தை அரசு ஏன் நடத்துதுன்னே தெரியல. மாட்டுகொட்டகைமாதிரி சில பள்ளிகள் இருக்கு. பள்ளிகளை நல்லா நடத்துறவங்ககிட்ட கொடுத்திட்டு பீஸ் கட்ட முடியாதவங்களுக்கு நீங்களே பீஸ் கொடுத்திருங்க. மற்றும் ஏழைகளுக்கு உயர்தர கல்வி கொடுக்கிறவங்களுக்குத்தான் என் ஓட்டு.
தொழில் தொடங்க சிங்கிள் விண்டோ முறை கொண்டுவர வேண்டும். ஊழலில்லாத வாசலா அது இருக்கணும். கோவில் என்பது ஆன்மீகத்துக்கான ஒரு இடம். கோயில்களை மனித வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். இதை அரசாங்கம் பண்ணமுடியாது. தோராயமா 36 ஆயிரம் கோயில்கள் தமிழ்நாட்டில இருக்கு. படிப்படியாக கோவில்களில் பக்தர்கள் நிர்வாகம் கொண்டுவரவேண்டும்.
இவற்றை செயல்படுத்த உறுதி ஏற்பவருக்கே என் ஓட்டு. தமிழ்நாட்டுல யார் இப்பிடி பண்ணுறாங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு. இதுமட்டுமல்லாது தமிழ்நாட்டுல என்ன விஷயம் பண்ணலாம்னு ஒவ்வொருத்தரும் ஐந்து விஷயம் முடிவு செய்து இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்” என்றார்