தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காகவும், துக்ளக் ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்னை வந்தார்.
துக்ளக் ஆண்டுவிழாவில் ஜே.பி.நட்டா பேசுகையில், “அறுபத்து மூன்று நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் வாழ்ந்த ஆன்மீக பூமி தமிழ்நாடு. பொங்கல் விழாவை தமிழ்மண்ணில் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் திருவள்ளுவரின் புகழ் பரவியுள்ளது. மிகப்பெரிய ஆசான் திருவள்ளுவர். தமிழகத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டுசெல்ல பிரதமர் உறுதிபூண்டுள்ளார்.
P
தமிழ்நாட்டில் வருங்காலத்தில் பா.ஜ.க ஆட்சி அமையும். அதனால்தான் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பா.ஜ.க-வில் வந்து இணைகிறார்கள். ஆளுமை மிக்க தலைவர் மறைந்த பிறகும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தக்க வைத்துள்ளார். இது அவரது ஆளுமையை காட்டுகிறது. அது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது” என்றார்.