உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று உறுதியாகியுள்ளது, என முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். உத்திரகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மொளரியா மற்றும் சில சட்டசபை உறுப்பினர்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.