பிகில் படத்தின் மூலம் விஜய்க்கு பெரிய வரவேற்பு கிடைத்ததோ இல்லையோ அந்த படத்தில் நடித்த அமிர்தா ஐயர் என்ற நடிகைக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதைவிட மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்பதுதான் உண்மை. அதற்கு முன்பு ’படை வீரன்’ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் பிகில் திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
அதனை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் பிக் பாஸ் கவின் உடன் ஜோடியாக லிப்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றது.தெலுங்கிலும் நடிகை அமிர்தா ஐயர் நடித்த சில படங்கள் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் தற்போது சினிமாவில் அடுத்த கட்ட நகர்வில் இருக்கும் நடிகை அமிர்தா ஐயர் தனக்கு வரும் வாய்ப்புகளை தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள கொஞ்சம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்க தொடங்கியுள்ளார். முதலில் குட்டியான உடைகளில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்தார் .தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சி உடையில் பங்கு பெற்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
அதில் கொஞ்சம் உச்ச கவர்ச்சியில் கலகலப்பாக தான் உள்ளார் நடிகை அமிர்தா ஐயர். குடும்ப குத்துவிளக்கு நாயகி என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவரை கவர்ச்சி கன்னி என்றும் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.