சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அப்போது அவர் கூறுகையில், “பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 கொடுக்கப்பட்டது.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய தேர்தல் பிரசாரத்தை வரும் 29-ம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறேன். மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும். தேர்தல் அறிக்கை வேறு 100 நாள் செயல்திட்டம் வேறு எனதை தெரிவித்துக்கொள்கிறேன். காலையிலும், மாலையிலும் என 30 நாள்கள் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளப்படும்” என்றார்