மனிதனின் உயிர் வாழ்வுக்கு அடிப்படையானதே உணவு தான். சிலர் இந்த உலகில் வாழ்வதற்காக சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ சாப்பிடுவதற்காகவே வாழ்வார்கள். ஆனால் சாப்பிடுவதிலும் சில நுட்பங்கள் இருக்கிறது.
நாம் காலையில் முழு வயிறு உணவையும், மதியத்தில் முக்கால் வயிறு உணவையும், இரவில் அரைவயிறு உணவையும் உண்ணலாம் எனக் கூறுவார்கள். உணவு வகைகளில் லைட் புட், வெயிட் புட் என இருவகை உண்டு. பெரும்பாலும் இரவு லைட் புட் சாப்பிடுவது நல்லது. இரவில் எவ்வாறு உணவு உண்ண வேண்டும் என்பதை பார்ப்போம்.
இரவு நேரத்தில் சீக்கிரம் இரவு உணவை உண்பது செரிமான மண்டலத்தால் உணவை எளிதில் ஜீரணிக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும். இதேபோல் இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கவும் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் அது உதவும். ஆனால், இரவு தாமதமாக உணவை உட்கொள்வது உடல் பருமனாவதற்கும், இரத்த சர்க்கரை அளவை உயர்த்தவும் எளிதாக வழிவகுக்கும். எனவே இரவு உணவு உண்ணும் பொழுது பிரியாணி போன்ற ஹெவி உணவை எடுப்பதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.