சில மாதங்களில் சுட சுட நமக்கெல்லாம் காத்திருக்கிறது தேர்தல் களம். பல கட்சிகளின் கனவை நனவாக்கும் இந்த களத்திற்கு ஆயத்த பணிகள் தொடங்கிவிட்டன.
அதில் முதல்கட்டமாக தமிழக வாக்காளர்களின் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை elections.tn.gov.in என் ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.