சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறைதண்டனை பெற்று வரும் சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்ச்சையில் உள்ளாளார். சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறைவு குறித்து அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவைத் தொடர்ந்து அவருடன் கூடவே இருந்த இளவரசிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து இளவரசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.