பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் மத்திய ,மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிலுக்குள் வைத்து கணவரை இழந்த பெண்ணை வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார் .நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் நாகை காமராஜர் நகர்ப் பகுதியில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டுக்கு அந்தப் பெண் சென்றுள்ளார் .அப்போது அந்த வழியே வந்த இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து அம்மன் கோவிலுக்குள் எடுத்துச் சென்று கோவில் வளாகத்துக்குள் வைத்து இரண்டு பேரும் கூட்டாக வன்கொடுமை செய்துள்ளனர்.

அதிகாலை 2 மணி அளவில் இரண்டு இளைஞர்களும் அந்தப் பெண்ணை விட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். அதன் பின்னர் அருகிலுள்ள நபர்கள் உதவியுடன் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அருண் ராஜ் மற்றும் ஆனந்த் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது