கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இந்துரா நகர் பகுதியில், திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக் நேர் மோதி இன்று விபத்து ஏற்பட்டது. அதில் பைக்கில் பயணம் செய்த தேனிமாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன்(25 )என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தெத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லமுத்தது (50) மற்றும் அவரது மனைவி லதா (25) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து சமவம் குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்