முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் என இரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறது சென்ற நூற்றாண்டு. அந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போரானது அடால்ப் ஹிட்லர் ஆல் தொடங்கப்பட்டது என கூறுவர்.
இந்த இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர் என்பவர் கொரோனா தொற்று தாக்கியதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். கிட்டத்தட்ட 100 வயதான டாம் மூர் கொரோனா நிதியாக பல லட்சம் வரை ஏழை மக்களுக்காக பணம் வசூலித்து கொடுத்துள்ளார். டாம் மூரின் குடும்பத்தினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.