நமது அன்றாட சமையல்களில் மிகவும் முக்கியமான பொருள்களில் ஒன்று தான் இந்த வெங்காயம்.வெங்காயத்தை இந்தியாவின் உணவுப் பட்டியலில் மிகவும் முக்கியமான உணவாக கூறலாம். நம் நாட்டில்
சமைக்கப்படும் எளிய உணவு முதல் கடினமான உணவுகள் வரை வெங்காயம் கண்டிப்பாக பயன்படுகிறது. அதிலும் புரோட்டாவுக்கு வெங்காயம் இருந்துவிட்டால் ஒரு புடி புடிக்கலாம்.
ஆனால் இங்கு பல பேருக்கு வெங்காயம் வெட்டுவது எனபது மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது. வெங்காயத்தை வெட்டி முடிப்பதற்குள் அனைவரின் கண்களில் இருந்தும் தாரை தாரையாக கண்ணீர் வந்து நிற்கும். ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த ஜெஸ்ஸி பாசோ என்பவர் வெங்காயத்தை விரைவாகவும் குறைந்த நேரத்திலும் நறுக்க ஒரு சுவாரசியமான முறையை கொண்டு வந்துள்ளார்.

அதில் வெங்காயத்தை நறுக்கும் முன்பு சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு செய்வதால் அதிலிருந்து வெளிப்படும் வாசனையை கட்டுப்படுத்தலாம் என்றும், இதனால் வெட்டும்போது நம் கண்களிலிருந்து கண்ணீர் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறியுள்ளார்.இது நல்ல ஐடியாவா இருக்கே முயற்சி செய்து பார்ப்போம். இதனால் நாம் இனி வெங்காயம் நறுக்கும் பின்னர் வெங்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விட்டு பின்னர் நறுக்கி பாருங்கள்.