மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நாள். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக தொழிலாளர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று சவால்களை எதிர்த்து வெற்றி பெறும் நாள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து உங்களிடம் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்தியை கையாண்டு வெற்றி பெறுவீர்கள்
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கடின காரியங்களையும் எளிதாக சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். நம்பிக்கை கூடியவர்கள் சிலர் உங்களுக்கு உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சந்தோஷம் அடைவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் மறைமுகத் தொந்தரவு வந்து போகும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கணவன்,மனைவி இடையேபிரச்சனைகள் உண்டாகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் ஏற்படும். யாரையும் நம்பி செயல்படாதீர்கள். வாகனம் தொந்தரவு ஏற்படும் .வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் உண்டாகும்.
![](https://agamtamil.com/wp-content/uploads/2020/12/ராசிபலன்-1-1.jpg)
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உங்களின் இலக்கை நோக்கி முன்னேற்றம் அடைவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்சினைகள் அகலும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி தேடிவரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் உத்தியோக பொறுப்பு ஏற்றுக் கொள்வீர்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பெற்றோருடைய ஆசிர்வாதம் கிடைக்கும்.பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். சிலவேலைகளை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. விலகி நின்றவர்கள் விரும்பி தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மாற்றம் ஏற்படும் நாள். கேட்டதை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள் சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.
![](https://agamtamil.com/wp-content/uploads/2020/12/ராசிபலன்-2.png)
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய ஞாபகங்களை நினைத்து வருத்தம் ஏற்படும் நாள்.புதியவர்களை நம்பி ஏமாற்றம் அடைவார்கள். சகோதர வகையில் உங்களுக்கு அலைச்சல் உண்டாகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் ஆக இருக்கக் கூடாது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியமான நாள். புதியவர்கள் உடைய அறிமுகம் கிடைக்கும். தாய்வழியில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்று பேசிய காரியத்தை சாதிக்கும் நாள். பிள்ளைகளால் புகழ் உயரும் சொத்து வாங்குவதில் கவனம் தேவை. நீண்ட பயணம் செய்வீர்கள் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நம்பி ஏமாற்றம் அடையும் நாள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.