மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்று பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் புரிந்து நடந்து கொள்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் .பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பண வரவு உண்டாகும் .வீட்டில் பெரியவர்களின் நல்ல மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும் .தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள் உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லை குறையும்.

கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும் .உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு துணையாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறும் நாள். வேலை விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும் உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்கள் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி பெறுவீர்கள் வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதியம் உயர்வு கிடைக்கும் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நிலையில் சுமாராக இருக்கும் நாள் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் பிரச்சனைகள் அகலும் வேலையில் ஏற்படும் பணிச்சுமை காரணமாக சோர்வாக காணப்படுவீர்கள்.
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.நாள் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வெளியில் செல்லும் போது வாகனத்தில் நிதானத்துடன் செல்வது நல்லது
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் சுப முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் அகலும் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் மனமகிழ்ச்சி ஏற்படும் நாள் வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல் படுவீர்கள் சுபகாரிய முயற்சிகள் நல்ல பலன் உண்டாகும்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள் பிள்ளைகளின் படிப்பில் மந்தநிலை ஏற்படும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவது நல்லது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இந்த பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும் நாள் குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும் தொழில் பணியாட்கள் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் உண்டாகும்.