மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதுமை படைக்கும் நாள். புதிய முயற்சிகள் யாவும் வெற்றிபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிப்பு பற்றி யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனை ஒன்று நிறைவேறும். வியாபாரத்தை பெருக்க அதைப் பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களிடம் வந்து பேசுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் வந்து போகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வரவேண்டிய பணத்தைப் போராடி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தைரியம் வரக்கூடிய நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வார்கள். சொந்தபந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்து கொடுப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி இல்லம் தேடிவரும். உத்யோகத்தில் சவாலான வேலையையும் சீக்கிரமாக முடித்துக் காண்பிப்பார்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாள். கணவன் மனைவி மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதன் மூலம் திருப்பங்கள் ஏற்படலாம். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகு மற்றும் இளமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனை ஒன்று தீர்வுக்கு வரும். கிராமத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பெருமைகள் குவியும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்தி முடிப்பீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் இருக்கவேண்டிய நாள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். உறவினருடன் பகை ஏற்படும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாள். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்று நடந்து கொள்வார்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்லதே நினைக்கும் நாள்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று இன்று நடைபெறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். வீடு வாகனத்தை வாங்குவதைப் பற்றி சிந்தனை செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மாற்றங்கள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை சிந்திப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் அழைத்துச் செல்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் பல முறை யோசித்து செய்வது நல்லது. அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை கிட்டும் நாள். எதையும் தன்னம்பிக்கையுடன் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் காண்பீர்கள்.