மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பழைய நினைவுகள் வந்து போகும் நாள். எதிர்பார்த்தவைகளில் சில விஷயம் தள்ளிப்போகும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் புதிய தொடர்பு கிடைக்கும் மனத் திருப்தி ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். உயர்ந்த பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். புது முடிவுகள் எடுப்பதன் மூலம் திருப்பங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களை கையில் எடுக்காமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி ஏற்படுத்துவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்களுக்கு கோபம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்படும். பழைய கடனை தீர்க்க புதிய கடன் வாங்குவீர்கள். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பழகுவதால் லாபம் அதிகரிக்கும் உத்யோகத்தில் மேலதிகாரியுடன் வாக்குவாதம் வேண்டாம்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை நடக்கும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பக்குவமாக பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய பொருட்கள் இன்று கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். புது தொழில் தொடங்குவதை பற்றி சிந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டுவார்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சாதனை படைக்கும் நாள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் உங்களை தேடி வருவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வீர்கள் உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதியவர்கள் நண்பர்கள் பார்ப்பதன் மூலம் மனமகிழ்ச்சி அடைவர். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகொடுக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கிய அறிவிப்பை தருவார்.
தனுசு
தனுஷ் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்வது முக்கியம். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும் உத்தியோகத்தில் மறைமுகமாக உங்களுக்கு தொந்தரவு ஏற்படும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.சகோதர வகையில் ஒற்றுமை ஏற்படும் கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். மனைவிவழியில் ஆதரவு அதிகரிக்கும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றி மன மகிழ்ச்சி அடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரையும் வியக்க செய்வீர்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நான் நினைத்தது நிறைவேறும் நாள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும் பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமையை பார்த்து மேலதிகாரி வியப்பார்