மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வெற்றிபெறும் நாள். கம்பீரமாக பேசி சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு குவியும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அதிரடி மாற்றம் ஏற்படும் நாள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய நண்பர்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். செலவுகளை குறைக்க திட்டம் போடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒன்று இன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்புடன் நடந்துகொள்வார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமைகளை பெற்றுக்கொள்வீர்கள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட பயணம் செல்ல நேரிடும். எடுத்த முயற்சியில் சிலகாரியங்கள் முடிவடைவதற்கு வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து திட்டம் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டிய நாள். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்படும். பழைய கடனை நினைத்து மனம் வருந்துவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு உங்களை தொந்தரவு செய்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்கள் வருகையால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய நட்பு விரிவாக்கம் அடையும். வாகனம் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கம்மியாக இருக்கும். உத்தியோகத்தில் தைரியமான முடிவுகள் எடுப்பது மூலம் வெற்றி காண்பீர்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சாதிக்கும் நாள்.எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பினால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களை தேடி சிலர் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவதால் லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வீர்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திட்டம் நிறைவேறும் நாள். பிரச்சனைகளின் ஆணிவேரை கண்டறிந்து தீர்ப்பீர்கள் பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றி யோசிப்பீர்கள் புண்ணிய தலங்கள் சென்று மனமகிழ்ச்சி அடைவீர்கள் சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாகும். மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று கொள்வீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வெற்றி பெறும் நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்வதால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பற்று வரவு கம்மியாகத்தான் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நிதானம் தேவைப்படும் நாள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து வந்து போகும். தாயாரின் உடல்நிலை சரியாகும். புது நட்பு வருவதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாள். குடும்பத்தினரின் ஆலோசனையை பெற்று முன்னேற்றம் அடைவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். வெளியூரிலிருந்து இல்லம் தேடி நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாள். குடும்பத்தில் உங்களது கை ஓங்கி நிற்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். புது பொருள் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை நீக்கிவிட்டு புதிய வேலையாட்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கல்களில் இருந்து மீள்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.புது வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புண்ணிய ஸ்தலங்கள் சென்று மனநிம்மதி அடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி வெற்றி காண்பீர்கள்.