இன்றைய ராசிகளுக்கான பலன்களை காண்போம்
மேஷம் ராசி காரர்களே
இன்றைய நாளில் மேஷ ராசிக்காரர்களுக்கு கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் முடிவுகளை எடுக்கும் முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயலாற்றுவதே நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்புப்பாலம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முடிவுகளில் சிறப்பான பலன்கள் உங்களை வந்தடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்களிடம் பணியாற்றும் பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி ஏற்றம் உண்டாகும். கணவன்,மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கவனமாக செயல்படவும்.
மிதுன ராசி காரர்களே
மிதுன ராசிக்காரர்களே இன்றைய நாள் கவலைகள் நீங்கி ஒரு புது புத்துணர்வு பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல்,வாங்கல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன.
கடகம் அன்பர்களே
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட கொஞ்சம் வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செயல்படும் தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு ஒருவித விரக்தியை ஏற்படுத்தலாம். புதிய முயற்சிகளில் வெற்றி வாகை சூட நீங்கள் செயல்படுவீர்கள்.
சிம்ம ராசி காரர்களே
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேறக் கூடிய ஒரு அற்புதமான நாளாக அமையப் போகிறது. புதிதாக சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் வந்து சேரும். பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி காண முயற்சிகளில் சாதகப்பலன்கள் உங்களை வந்தடையும்.
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் .அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் போட்டி பொறாமைகள் மறைந்து நட்பு உணர்வுடன் செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்க நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.
துலாம் ராசிக் காரர்களே
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வாக்கு சாதுர்யத்தால் பல காரியங்களை செய்து காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய இரக்க குணத்தால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை அதிகம் பெறுவீர்கள்.உங்கள் ஆரோக்யம் சீராக இருக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றி இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க கூடிய ஒரு புதிய தைரியம் பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு அனுகூலமாக கிடைக்கும். உத்தியோக உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் தொடர்பான விஷயத்தில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை கவனமாகக் கையாளுங்கள்.
தனுசு ராசிக்காரர்களே
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் குழப்பங்கள் நீடிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.
மகர ராசி அன்பர்களே
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தின் மீதான அக்கறை மேலோங்கி வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களிடம் பாராட்டுகளைப் பெறுவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் ஏற்றம் பெறலாம். புதிய விதிகளை சாமர்த்தியமாக கையாள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
கும்ப ராசி காரர்களே
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த விஷயங்கள் அனைத்தும் நினைத்தபடியே நிறைவேறும் அற்புதமான நாளாக உள்ளது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காண வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு இனிமையான நாளாக அமைய இருக்கிறது. நீண்டநாள் தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் யாவும் நடைபெற வாய்ப்புகள் அதிகம். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படும். மற்றும் வியாபாரரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
ராசிபலன் களின் கணிப்பில் வருவது போல் இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்க வாழ்த்துக்கள்.