மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எளிதாக முடிய வேண்டிய சில காரியங்கள் கூட போராடி முடிக்க கூடிய சூழல் ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் இடையே பிரச்சனைகள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் ஏற்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். உற்சாகமாக எதையும் முன்னின்று நடத்துவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முயற்சியால் வெற்றி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் பலம் பலவீனத்தை தெரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் நாள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவுக்குவரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் லாபம் தரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி ஏற்படும். சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அழுத்தம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குறையை எடுத்துச் செல்வார்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியின் காரணமாக பிரச்சனை ஏற்படும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு எதையும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களிடம் வந்து உதவி கேட்பார்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். உத்தியோகத்தில் புதுமையான முடிவுகள் எடுப்பதன் மூலம் மேலதிகாரி உங்களை கூப்பிட்டு பாராட்டுவார்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதிய பாதை திறக்கும் நாள். புதிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.வியாபாரத்தில் சில தந்திரங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஆதரவால் மனநிம்மதி அடைவீர்கள்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயர்வு கிடைக்கும் நாள். எதிர்ப்புகள் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். பழைய நண்பரை சந்தித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய கடனை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களை தட்டுவதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தைரியம் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை கேட்டு மேலதிகாரி செயல்படுவார்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் மூலம் நல்வழி பிறக்கும். அவசரத்திற்கு வாங்கிய கடனை கட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவு தருவார்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்லது நடக்கும் நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு நீங்கி தெளிவு பிறக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும் அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவதால் நஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்ப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.