மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். மனதிற்கு இதமான நல்ல செய்திகள் வரும். விலகி நின்றவர்கள் உங்களை தேடி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவதும் மூலம் லாபம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சிந்தனை திறன் அதிகரிக்கும் நாள். எதையும் சமாளிக்கும் திறமை உங்களிடம் பிறக்கும். உங்களை நம்பி வந்தவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து காட்டுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவு கிடைக்கும் நாள். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் கவனத்தை செலுத்துவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை,ஆபரணங்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் அதிகரிக்கும் நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் சீக்கிரமாக செயல்படுவீர்கள். சிறுசிறு அவமானங்கள் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மனைவி உறவில் ஒற்றுமை ஏற்படும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வெளிவட்டாரத்தில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாள். பேசி காரியத்தை சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு சில தந்திரங்களை கற்றுக் கொடுப்பார்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதுமை படைக்கும் நாள். குடும்பத்தில் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிப்பை பற்றி யோசிக்கத் தொடங்குவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப பொருட்களை வாங்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களுடைய வேலைப்பளு அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திடீர் யோகம் கிடைக்கும் நாள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். சொந்தபந்தங்கள் உங்களை தேடி வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வீடு தேடி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறு அதிகாரி பாராட்டுவார்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாள். கணவன்-மனைவிக்குள் இருந்த நெருக்கம் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையான எண்ணங்கள் தேவைப்படும் நாள். ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே வேலை செய்யும்போது தவறுகள் நடக்கும் வாய்ப்பு அதிகம். பணம் நகை விஷயங்களில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியத்தோடு இருக்காதீர்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. யாரையும் விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பேசுவதில் கவனம் தேவை.