மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் வாயை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம் உத்தியோகத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை ஏற்படும் நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த உங்களுடைய ஆலோசனை கேட்கப்படும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடைபெறும் நாள். புதிய முயற்சிகள் யாவும் கண்டிப்பாக வெற்றி அடையும். உறவினர்களால் அன்புத் தொல்லை அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்தி இல்லம் தேடிவரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். உத்தியோகத்தில் அந்தஸ்து உயரும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். எதிர்ப்புகள் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய கடனைப் பற்றி யோசித்து மன உளைச்சல் அடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் துணிவோடு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவதும் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுக்க வேண்டி வரும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களை நிதானமாக செய்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் நடந்துகொள்ளுங்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளுடன் பிரச்சனைகள் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நிதானம் தேவைப்படும் நாள். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய பிரச்சினைகளை நினைத்து கோபம் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்படும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாள். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றி மன மகிழ்ச்சி அடைவீர்கள். வாகனம் வாங்குவது பற்றி திட்டம் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புதிய விளையாட்டுகளை சேர்த்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை கூட்டு பாராட்டுவார்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முயற்சிகள் மூலம் வெற்றி காண வேண்டிய நாள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வதன் மூலம் நஷ்டம் ஏற்படலாம். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் பழைய பிரச்சனைகளுக்கு முடிவு வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் நட்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.