மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். புது நட்பால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாள். எதிர்பாராத பணவரவு இருக்கும். உறவினர்கள் உடன் கலந்தாய்வு செய்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உங்களை தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பழைய சிக்கல் ஒன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுகள் குவியும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நடக்கும் நாள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும் வியாபாரத்தில் புது சலுகைகள் கிடைக்கும் உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கூட்டு பாராட்டுவார்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாள். தடைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வாகனம் சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பணம் வரவு அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் மூலம் லாபத்தை அதிகரிக்க உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வெளியூரிலிருந்து இல்லம் தேடி நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருந்து உதவி செய்வார்கள். புதிதாக ஆடை வாங்கும் திட்டம் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யத் திட்டம் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பணவரவு நன்றாக இருக்கும் நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான விஷயங்கள் நிலவும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புதிய நட்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உடன் பணி புரிவோர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்ப்புகள் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்திலிருந்து பிரச்சனைகள் தீரும் நாள். இன்று உங்கள் உடல்நிலையில் இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுடன் பாசமாக பழகுவார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆலோசனையால் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வேண்டாம்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு அன்றைய நாள் முன்னேற்றம் காண வேண்டிய நாள் எந்த செயலையும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செய்வது நல்லது உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் மந்தமாக இருக்கும் உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் மூலம் வெற்றி காண வேண்டிய நாள். இன்று பெரிய பதவியில் இருப்பவர்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் இருக்கும்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களால் உதவி கிடைக்கும் நாள். கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். புதிய முயற்சிகள் காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோக ரீதியாக அலைச்சல் ஏற்படும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் டென்ஷன் ஏற்படும் வண்டி வாகனங்களில் கவனத்துடன் செல்வது நல்லது. மற்றவர்கள் செயலை தலையிடாமல் இருப்பது முக்கியம்.