மேஷம்
மேஷ ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களால் நல்ல இனிய நாளாக இருக்கப் போகிறது.குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் கனிவை காட்டினால் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வரவுகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே இன்றைய நாள் நீங்கள் நினைக்கக் கூடிய அனைத்து காரியங்களும் கைகூடும். ஆழ்ந்த சிந்தனையில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பொறுமையாக பேசுவது நல்லது.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தருகின்ற நாள். நீங்கள் நினைக்கும் அனைத்தும் இன்று நடைபெறும். குடும்பத்தினருடன் மிகவும் அன்பாக நடந்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணவரவு இன்று உங்கள் கையை தேடி வரும். உங்கள் தொழிலில் சிறந்த லாபம் காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகள் குவியும் நாள். குடும்பத்தில் இருப்பவர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள் .பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள் .உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சுயதொழில் செய்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் நல்ல முடிவுகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் நெருங்கிய நண்பர்களால் ஆதரவுகள் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுடைய மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வெளியூர் சொல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணம் வரவு நன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு நீங்கள் நினைத்த நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியின் ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும்.குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது .திருமணம் போன்ற சுபகாரியங்கள் நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும் .மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் உங்கள் வீட்டிற்கு நல்ல செய்திகள் வரும். ஊதியம் தொடர்பான விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
தனுஷ்
தனுசு ராசி நேயர்களே இன்றைய நாள் நன்மைகள் அதிகரிக்க இருக்கும் நாள் . நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்கள் தொல்லை நீங்கும்.

மகரம்
மகர ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.குடும்பத்தில் இருக்கும் ஒரு சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமான அலைச்சல் உண்டாக வாய்ப்பு இருக்கும் .தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே இன்றைய நாள் புது பொருள்கள் வாங்க நினைப்பவர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் மிக எளிதாக சமாளிப்பீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கூடுதல் கவனம் தேவை.
மீனம்
மீன ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் அடைவீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்.தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டாகும்.