மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உறவினர் வருகையால் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாள் .நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் ரீதியான முன்னேற்றத்தில் அதிக லாபம் இருக்கும்
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நாள் .சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேல் அதிகாரியிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு கணவன் மனைவி இடையே பரஸ்பரம் ஏற்படும் தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் சற்று கவனம் தேவை. உடன் இருப்பவர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் அதிகம்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய நாள்.நீங்கள் கையில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி கிடைக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான நிலை காணப்படும் குடும்பத்தில் அமைதி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீண்ட தூரம் பயணம் செல்ல வாய்ப்புண்டு. பண விஷயத்தில் கவனம் தேவை.தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த முடிவும் எடுக்காமல் பொறுமையாக கையாள்வது மிகவும் அவசியம்.கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டைகள் ஏற்படும் சுயதொழில் செய்பவருக்கு ஏற்றம் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.பிள்ளைகள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்வு நடைபெறும். சுயதொழில் புரிவோருக்கு மன நிம்மதி கிடைக்கும்.
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும் நாள். குடும்பத்துடன் வெளியே செல்ல வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

தனுஷ்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கவனம் தேவை.எந்த ஒரு வேலையிலும் கவனத்தோடு செயல்படுவது நல்லது எதையும் ஆலோசித்து முடிவு எடுப்பது உங்களுக்கு நன்மை தரும். கணவன்-மனைவி இடையே அதிக நெருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் நாள்.உறவினர் வருகையால் குதுகலத்துடன் காணப்படுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்த பலன் கிடைக்கும்.பெற்றோரின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் இருப்பது மனதுக்கு நிம்மதியை அளிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும்