தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தனது சினிமா வாழ்க்கையை குறித்து அளித்த பேட்டியில் நான் சினிமாவுக்கு வந்தபோது நடித்த படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வந்திருந்தேன். கதாபாத்திரங்களும் அப்படி அமைந்தன இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது. நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு வருகிற மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றேன். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் பதட்டம் இருக்க தான் செய்யும்.
படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்ததும் எதிர்பாராத பயம் என்னை தேடி வரும் இயக்குனர் கேமராமேன் ஏதாவது சொன்னால் மட்டும் இன்னும் கொஞ்சம் பயம் அதிகரித்து விடும். ஆனால் அது யாருக்கும் தெரிகிற மாதிரி நான் காட்டிக்கொள்ள மாட்டேன். அந்த கதாபாத்திரத்திற்கு செல்ல வேண்டும் என்கிற உணர்வு ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி நடிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கும். பத்து வருடங்களாக சினிமாவில் நான் நடித்து வருகிறேன். இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.