பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் மற்றும் 49 ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையினர் மெந்தர் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அந்த வழியாக வானத்தில் வந்த முஸ்தபா இக்பால்கான், முர்தசா இக்பால் ஆகியோர் மீது சந்தேகம்கொண்டு விசாரித்தனர். அதில் ஒருகட்டமாக அவர்களின் செல்போனை சோதித்த போது, அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டில் ஒருகுறிப்பிட்ட எண்ணில் இருந்து தொடர்ந்து போன் வந்திருந்தது.
தொடர் விசாரணையில் ஒரு இந்து கோயிலில் கையெறி குண்டை வீச பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பிடம் இருந்து இவர்களுக்கு தகவல் வந்திருப்பது தெரியவந்தது. ஆரி கிராமத்தில் இருக்கும் கோயில் மீது வீச, கையெறி வெடிகுண்டை கையாளும் நுட்பமும் தனி வீடியோவாக அனுப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து முஸ்தபா, அவரது கூட்டாளிகளான யாசின், ரயீஸ் அகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முஸ்தபா வீட்டில் இருந்து 6 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டது.