இத்தாலியின் தலைநகரமான ரோம் நகரில் அமைந்துள்ள இந்திய துாதரகத்தை கடந்த குடியரது தினத்திற்கு முந்தினநாள் இரவு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதக் நடத்தினர். தூதரகத்தை சூறையாடியதுடன், அங்கு காலிஸ்தான் கொடியையும் ஏற்றி அராஜகத்தை அரங்கேற்றினர். தூதரக சுவர்களில் காலிஸ்தான் வாழ்க என்று எழுதியும் வைத்தனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய அராஜகம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிகழ்விற்கு இந்தியா கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளது.
இந்திய துாதரகத்தையும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்கும் பொறுப்பு இத்தாலி அரசுக்கு உள்ளது என்றும். வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன் அரசு இதுபோன்ற நிகழ்வுகளின் போது சிறப்பாக செயல்பட்டதாகவும் மத்திய அரசு இத்தாலிக்கு அறிவுறுத்து கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.