கடந்தசில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் எல்லைப்பகுதியில் நடமாடிய இரண்டு ஊடுருவல்காரர்களை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இஎந்நிலையில் நேற்று இந்திய எல்லையில் ட்ரோன் எனப்படும் ஆள் இல்லாத குட்டிவிமானம் மூலம் வீசப்பட்ட 11 கையெறி குண்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தின் சலாச் கிராமம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதற்கும் சர்வதேச எல்லைக்கும் இடையே ஒருகிலோ மீட்டர் தான் இருக்கிறது. இங்கு 19, 20 ஆம் தேதிகளில் ட்ரோன் இயங்கியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் அதை சுட்டனர். போலீஸாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் இதுதொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வயல்வெளியில் 11 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு மரச்சட்டத்தால் ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானில் இருந்து இப்படி ட்ரோன் மூலம் அடிக்கடி ஏதாவது பொருள்கள், வெடிமருந்துகள், கள்ளநோட்டுகள் இந்திய எல்லைக்குள் வீசப்படுவது குறிப்பிடத்தக்கது.