இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சீன ராணுவ வீரர் ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைவதை நம் நாட்டு ராணுவத்தினர் கண்டனர்.
இதையடுத்து சீன வீரரை சுற்றிவளைத்த இந்திய ராணுவத்தினர் அவரை கைது செய்தனர். இந்திய ராணுவத்தினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சீன வீரர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்ததுள்ளது. இது சம்பந்தமாக சீன பாதுகாப்பு படையினருக்கு இந்திய ராணுவம் தகவல் கொடுத்துள்ளது. பிடிபட்ட வீரரை சீனாவிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.