இந்தியாவோடு அண்டை நாடுகளில் எல்லைகள் பலவற்றிலும் தொடர்ந்து பிரச்னைகள் இருண்டுவருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை டிசம்பர் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை குவாஹாட்டியில் நடக்க உள்ளது.
இந்த 51வது எல்லை ஒருங்கிணைப்பு மாநாட்டில் பி.எஸ்.எப், வங்கதேச எல்லை காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், இருமுறை இந்த மாநாடு நடப்பது வழக்கம்தான் என்றாலும், டெல்லிக்கு வெளியே மற்றொரு பகுதியில் நடப்பது இதுவே முதல்முறை.