இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல் இரவாக அடிலெய்டில் இன்று முதல் நடக்க உள்ளது
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது விளையாடிக் கொண்டு இருக்கின்றது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும் ,20 ஓவர் தொடரை இந்திய அணி யும் கைப்பற்றி உள்ளது. தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது இதன்படி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவாக இன்று தொடங்குகிறது. இளஞ்சிவப்பு நிற பந்தில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் பலர் சில நாட்களாக தீவிரமாக பயிற்சி செய்து உள்ளனர்.
முதலாவது டெஸ்ட் காண போட்டியில் கலந்து கொள்ளும் லெவன் அணியை இந்திய அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது.இதில் 11 பேரும் வலதுகை ஆட்டக்காரர்களாக இடம்பெறவுள்ளனர் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.பகலிரவு பயிற்சி கிரிக்கெட்டில் 73 பந்துகளில் சதம் விளாசிய இளம் கிரிக்கெட் வீரர் ஆன விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மட்டும் அரைசதம் அடித்த சுப்மான் கில் ஆகியோரும் இடம் பிடிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான இடத்தை மயக்க அகர்வால் மற்றும் பிரிதிவி ஷா தக்கவைத்துக் கொண்டுள்ளனர் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா இடம் பிடித்துள்ளார் .ஒரே சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் களம் இறங்குகிறார்.
இந்திய கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் உடன் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் தாயகம் திரும்ப உள்ளார்.அதன் பிறகு எஞ்சிய மூன்று டெஸ்டிலும் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனவே இந்த டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக தொடங்குவது அவர் முக்கியத்துவம் காட்டுவார் கோலி, புஜாரா ஆகியோரின் அபார பேட்டிங் 2018-19 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது என்பதை நாம் அனைவரும் தெரிந்திருப்போம். அதேபோல் சாதிக்க வேண்டும் என்று இவர்கள் இருவரும் நிலைத்து நின்று ஆடுவார்கள். பின் மைதானத்தில் வேகப்பந்து வீச்சு அதிகமாக ஈடுபடும் நன்கு பலம் ஆகும் எனவே மூன்றாம் பும்ரா,உமேஷ் யாதவ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களது வித்தையை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்டது என்ற வகையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது இந்தத் தொடரின் வெற்றிக்கு 30 புள்ளிகளும் டிராவுக்கு10 புள்ளிகளும் வழங்கப்பட இருக்கின்றது.புள்ளி பட்டியலில் நியூஸிலாந்து வேகமாக முன்னேறி வருவதால் இந்திய அணி முதல் இரண்டு இடத்திற்குள் நீடிக்கவேண்டும் அதனால் இந்த தொடரில் குறைந்தது ஒரு வெற்றி அல்லது மூன்று டிராவது பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் அடுத்த சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும் ஜெயித்தாலும் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் சொல்ல முடியாத சிக்கல் உருவாகும் வாய்ப்பு உள்ளது.எனவே ஆஸ்திரேலிய தொடரில் முத்திரை பதிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
ஆஸ்திரேலிய அணியின் தூணாக நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக விளங்கும் ஸ்டீபன் ஸ்மித் ,மார்னஸ் லபுஸ்சேனும் அங்கம் வகிக்கிறார்கள் களத்தில் இவர்களின் தந்திரத்தை பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் எகிரும் சூழ்நிலைக்கு தக்கபடி விளையாடும் திறன் கொண்ட வீரர்கள் இவர்கள்.
இவர்களை சீக்கிரமாக வெளியேற்றிவிட்டால் இந்திய அணிக்கு ஜெயிப்பதற்கு மிகவும் எளிதாகி விடும்.
போட்டி நடக்க இருக்கும் அடிலெய்டில் இதுவரை 12 டெஸ்டுகள் விளையாடிய இந்திய அணி இரண்டு வெற்றியும் ஏழு தோல்வியையும் சந்தித்துள்ளது. அதுபோக 3 ஆட்டங்களில் டிரா கிடைத்துள்ளது.இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இந்த மைதானத்தில் மூன்று சதங்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் இங்கு 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 41 போட்டிகளில் வெற்றியும் ,18 போட்டிகளில் தோல்வியும், 19 போட்டிகளில் டிரா வும் கண்டுள்ளது. 1948ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியா 674ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.