நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் சுல்தான். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் கேஜிஎப் வில்லன் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
கடைசியாக கார்த்திக் நடிப்பில் வெளியான தம்பி படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் கார்த்தி ரசிகர்கள் சுல்தான் படத்தை முழுவதுமாக நம்பி இருக்கின்றனர் சமீபத்தில் சுல்தான் படத்தினுடைய முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கொரோனா காரணமாக திரையரங்குகளில் படம் எதும் வெளியாகாததால் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் படமும் இணைய தளங்களில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படக்குழு இதனை முற்றிலுமாக தவிர்த்து விட்டனர்.

மேலும் நேற்று மாலை 5 மணி அளவில் சுல்தான் படத்தினுடைய டீசர் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அறிவித்தபடியே 5 மணி அளவில் இந்த படத்தின் டீசர் வெளியாகாமல் ஐந்து முப்பது மணி அளவில் டீசர் வெளியாகியது. டீசருக்காக காத்திருந்த ரசிகர்கள் சொன்ன நேரத்தில் டீசர் வெளியிடவில்லை இவர்களால் எப்படி திரையரங்குகளில் படத்தை வெளியிட முடியும் என விமர்சனம் செய்யத் துவங்கியுள்ளது. தற்போது கே ஜி எஃப் ஸ்டைலில் இந்த டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
https://youtu.be/jP_TBrBjebo