ஆன்லைனில் கத்தி வாங்கும் வாடிக்கையாளர்களை குறித்து தகவல் தரும்படி ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கு நாக்பூர் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கொலைகளில் கத்தி போன்ற கூர்மையான பொருட்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்த கொலைகள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக ஆன்லைனில் 122 பேர் கத்தி அல்லது கூர்மையான பொருட்களை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் 30 பேர் பல்வேறு குற்றச் சம்பவ பின்னணியில் தொடர்பில் உள்ளவர்கள். தற்போது இந்த குற்றவியல் வரலாறு கொண்டு இருப்பவர்களுக்கும் இந்த கொலைக்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? என்பதை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அவர்கள் போலீசாரின் கண்காணிப்பின் கீழ் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் கத்தி மற்றும் கூர்மையான பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் குறித்து தகவல் தரும்படி ஆன்லைன் நிறுவனங்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். நாக்பூர் போலீஸ் கமிஷனர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் கத்தி வாங்கும் வாடிக்கையாளர்கள் தகவலை நீங்கள் வழங்க வேண்டும், மேலும் வாடிக்கையாளர்களின் அதிகாரப்பூர்வமாக ஈமெயில் ஐ.டி.யை குற்றப்பிரிவு போலீசாருக்கு நீங்கள் வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை வாங்கினால் உங்களைப் பற்றிய தகவல் போலீசார் பதிவு செய்து வைப்பார்கள் ஆகையால் ஆன்லைனில் கத்தி வாங்குவதாக இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக வாங்குங்கள்.