தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசுகையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு தன்னை விவசாயி என்று கூறிக்கொள்கிறாரே தவிர இதுவரை விவசாயிகளுக்காக அவர் எதையும் செய்யவில்லை. இதற்கு முன் திமுக ஆட்சிக்காலங்களில் தான் 7,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி, வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்றார்.