சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை ஆன பிறகு பெங்களூர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தினார். இதுகுறித்து சட்டப் பேரவை தலைவர் மதுசூதனன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் மூத்த நிர்வாகிகள் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
புகார் அளித்த பிறகு அனைவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறும்போது, “சசிகலா மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே டிஜிபியிடம் புகார் அளித்தோம்.
அதிமுக உறுப்பினராக இல்லாத சசிகலா கட்சி கொடியை எப்படி பயன்படுத்தலாம். அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு தார்மீக உரிமையில்லை” என்றார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும்போது, “உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு, இனி செல்ல வேண்டும் என்றால் ஐ.நா சபைக்குத்தான் சசிகலா செல்ல வேண்டும்” என்றார். மேலும்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுகவிற்குத்தான் இரட்டை இலை சின்னம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிடது என்றும்.
தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையும் அமைச்சர் சி.வி சண்முகம் குறிப்பிட்டு பேசினார்.