மஹாராஸ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ், இணைந்த மகா விகாஷ் அகாடி ( எம்.வி.ஏ) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் மஹாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை சாம்பாஜிநகர் என பெயர் மாற்றம் செய்ய ஆளும் சிவசேனா முடிவு செய்துள்ளது. இதற்கு அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மஹாராஸ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாலாசாகேப் தோரட், “மகா விகாஷ் அகாடி கூட்டணயின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இது குறிப்பிடப்படவில்லை” என்றார். “எம்.வி.ஏ அரசு மக்களுக்கு வேலை செய்ய அமைக்கப்பட்டது. நகரின் பெயரை மாற்ற அல்ல” என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் நிருபம் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு எழுந்துள்ளது.