இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.,) தலைவரான கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் மூன்று இடங்களில் 90 சதவீதம் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கங்குலிக்கு ‘ஆன்ஜியோபிளாஸ்டி’ சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே கங்குலிக்கு மீண்டும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மீண்டும் ஆன்ஜியோபிளாஸ்டி சிசிகிச்சை மேர்கொள்ளப்பட்டது. இரண்டு அடைப்புகளை சரிசெய்ய கூடுதலாக இரு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் டாக்டர் அஷ்வின் மேத்தா, டாக்ட்ர அப்தான் கான் ஆகியோர் கங்குலிக்கு பரிசோதனை நடத்தியதாகவும். இப்போது அவர் நலமாக உள்ளதாகவும். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கங்குலி தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.