கர்நாடகாவில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிராமணரை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூபாய் 3 லட்சம் நிதி உதவியாக வழங்கப்படும் என அந்த மாநிலத்தின் அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம் சார்பில் இரண்டு திட்டங்கள் தற்போது தொடங்க உள்ளது இதற்காக மத்திய அரசிடம் ஒப்புதலையும் பெற்றுள்ளது .முதலில் ஏழை குடும்பத்து அர்ச்சகர்களை திருமணம் செய்யும் 75 பிராமணப் பெண்களுக்கு ரூபாய் 3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 550 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூபாய் 25 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் கர்நாடக மாநிலம் சார்பில் பிராமண மேம்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்கள் தொகையில் சுமார் 3 சதவீதம் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பொருளாதார ரீதியில் பலவீனமான பிரிவினருக்கு உதவும் தங்கள் முயற்சியின் ஒரு பகுதி இது என பிராமண மேம்பாட்டு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்