கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் பகுதி சாலையோரம் நின்ற அரசு பேருந்து மீது வேன் மோதியதில் 6 பேர் பலியானார்கள்.

ஈரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற ஆம்னி வேன் அரசு பேருந்தின் பின்புறம் மோதியது. இறந்தவர்களின் உடலை மீட்டு காவேரிப்பட்டினம் போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் வேனில் பயணம் செய்த ஐந்துபேரும் அரசு பேருந்தில் பயணித்த ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் காவேரிப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தினால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.