அயோத்தி தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. அண்மையில் இவ்வழக்கு முடித்து தீர்ப்பு கூறப்பட்ட நிலையில் அங்கு ராமர் கோயில் கட்டும்பணியை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடங்கியுள்ளன. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்களின் பங்களிப்புத் தொகை கலெக்சன் செய்யப்பட்டு அனைவரின் பணத்திலும் கட்டுமானப்பணி நடக்க உள்ளது.
இந்நிலையில் பாஜக இதை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதாக சிவசேனை கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் நடக்கிறது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூபாய் 5 லட்சம் நன்கொடையாக கொடுத்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் அளித்த நன்கொடையை ஆர்எஸ்எஸ் சென்னை நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டுள்ளார்.