அயோத்தி ராமல் கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் அமைத்துக்கொள்ள தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்துவரும் நிலையில் பள்ளிவாசல் கட்டும் பணி குடியரசுதினமான நேற்று தொடங்கியது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிபூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கரில் பள்ளிவாசல் கட்டப்படுகிறது.
அந்த பகுதியில் தேசியகொடி ஏற்றியும், மரக்கன்றுகளை நட்டும் கட்டுமானபணிகள் ஆரம்பமானது. இந்தோ – இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை, மசூதி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. எந்த மன்னரின் பெயரும் பள்ளிவாசலுக்கு சூட்டப்படாது என ஏற்கனவே அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.