சாணத்திற்கும் வரட்டியிற்கும் வித்தியாசம் தெரியாமல்
இது வரட்டி தான்! இல்லை இல்லை இது மாட்டுச் சாணம்!
என கவுண்டமணியும் செந்திலும் நடித்த லக்கி மேன் திரைப்படத்தின் காட்சியில் செந்தில் கூறுவார். ஆனால் ஆனால் இங்கு ஒருவர் அதை சாப்பிட்டே பார்த்து தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
கடைத்தெருவில் கூட கிடைக்காத பொருட்களையெல்லாம் கூட கட்டம் கட்டிக் கொண்டு விற்பனை செய்கிறது ஆன்லைன் நிறுவனங்கள். பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசானில் வரட்டி வாங்கி சாப்பிட்டு பார்த்த ஒருவர் அதன் சுவை பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். இந்த கருத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து டாக்டர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமேசானில் ஒவ்வொரு நபர்களும் தாங்கள் எந்த பொருளை வாங்குகிறார்களோ அதைப்பற்றி விமர்சனத்தை பதிவிடுவது வழக்கம்.இவ்வாறு அவரும் தான் வாங்கிய சாணத்தைப் பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் எனக்கு இதை சாப்பிட்டதால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அதனால் இதனை வாங்குவதற்கு முன் மற்றவர்கள் யோசிக்கவும் என குறிப்பிட்டுள்ளார். இதனை கவனித்த டாக்டர் சஞ்சய் அரோரா என்பவர், இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இது தான் எங்கள் இந்தியா. ஐ லவ் மை இந்தியா என வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.