அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வெற்றிகரமாக முடிவுற்ற நிலையில் அமெரிக்க புதிய அதிபரின் பதவி ஏற்பு விழா தற்போது நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்காக பல தலைவர்களும் அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த விழாவில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.
அதிபராக ஜோபிடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு பதவியேற்க உள்ளார்கள். ஜனவரி 6 ஆம் தேதியன்று நடைபெற்ற அமெரிக்க கேப்பிடல் கட்டிடம் மீதான தாக்குதல் மற்றும் கலவரத்துக்கு பின்னர் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் ஜோபிடன் பதவியேற்பு விழாவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.