அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும் (78) முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சோந்த கமலா ஹாரிசும் (56) நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனா். புதிய அதிபரான ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலகின் பல்வேறு நாட்டுத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்துக்களுக்கு என கைலாசா தேசத்தை உருவாக்கி அதன் அதிபர் என தன்னை சொல்லிக்கொள்ளும் சாமியார் நித்தியானந்தாவும், அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கும் வாழ்த்து தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார்.
நித்தியானந்தா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்து மதத்தின் உச்ச போப்பாண்டவர் மற்றும் தலைவர், இந்து அறிவொளி நாகரிக தேசமான கைலாசா சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள். உலகெங்கிலும் உள்ள இரண்டு பில்லியன் இந்துக்கள் சார்பாக வாழ்த்துகிறேன். வளமான, அறிவொளி பெற்ற எதிர்காலத்திற்கான உங்களுக்கும், உங்கள் ஜனாதிபதி பதவிக்கும், அமெரிக்காவிற்கும் ஆசீர்வாதம்.
அதன் அனைத்து குடிமக்களுக்கும், யுனைடெட் ஸ்டேட்ஸ் தொடர்ந்து பொறுப்பான தலைமைப் பாத்திரத்தை வகிக்கட்டும். அமைதி, மிகுதி மற்றும் நல்லிணக்கத்துடன் வளர உதவுங்கள்” என கூறியுள்ளார். மேலும்னவரது கடிதத்தில் இந்து மதத்தின் உச்ச போப்பாண்டவர், ஜகத்குரு மகா சன்னிதனம் பகவன் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் என தனது பெயரை குறிப்பிட்டதுடன், ஸ்ரீகைலாசா தேசத்தில் இருந்து வாழ்த்து அனுப்புவதாகவும் பெருமையோடு தெரிவித்துள்ளார்.