அமெரிக்கா நாட்டின் 46வது அதிபராக ஜோபைடன் இன்று பதவியேற்க இருக்கிறார். அதிபர் பதவியில் இருக்கும்போது ஆண்டு ஒன்றுக்கு 4,00,000 டாலர் சம்பளம் பெறுகிறார் ஜோ பைடன். இதன் இந்திய மதிப்பு 29246000 ரூபாய் ஆகும். இந்த சம்பளத்துக்கு வரி விதிக்கப்படும்.
சம்பளம் தவிர அதிபருக்கு பொழுதுபோக்கு படியாக 19000 டாலர் வழங்கப்படுகின்றது வருடாந்திர செலவு படியாக 50,000 டாலரும், வரியில்லா பயண படியாக 100000 டாலரும் வழங்கப்படுகின்றது.